< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர் கைது
|19 July 2022 10:18 PM IST
பழனி அருகே இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி வழியாக ஒட்டன்சத்திரம்-கோவை இடையே பைபாஸ் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரத்தில் ஆங்காங்கே இரும்பு பொருட்கள் மற்றும் கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பழனி அருகே வயலூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடி 2 பேர் மினி லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், சாமிநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த நந்தகோபால் (வயது 30), சாமிநாதபுரம் ஆத்துகுமாரபாளையத்தை சேர்ந்த தர்மராஜ் (21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.