திருவண்ணாமலை
ஆடுகளை திருடிய 2 பேர் கைது
|செய்யாறு அருகே ஆடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்யாறு
செய்யாறு தாலுகா எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, விவசாயி இவர் 30 ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்தார்.
இரவு 9.30 மணியளவில் திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால் அவர் வெளியே வந்து பார்த்த போது 2 பேர் 3 ஆடுகளை திருடிக்கொண்டு ஆட்டோவில் சென்றனர். உடனடியாக அவர் கூச்சலிட்டார்.
இதையடுத்து கிராம மக்கள் உதவியுடன் ஆட்டோவை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
மேலும் ஆட்டோவில் இருந்த 3 ஆடுகளை மீட்டனர். பின்னர் 2 பேரையும், ஆட்டோவையும் செய்யாறு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் பிடிபட்டவர்கள் செய்யாறு வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்த தமிழரசன் (வயது 28), மொய்தீன் (31) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். மேலும் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.