< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் மின்வயர்களை திருடிய 2 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் மின்வயர்களை திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
21 July 2023 4:00 PM IST

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் மின்வயர்களை திருடிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை நவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 52). படப்பை பஜார் பகுதியில் எலக்ட்ரிக் பிளம்பிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் கடைக்குள் சென்று மின்வயர்கள் வேண்டும் என்றார். கடைக்காரர் மின்வயர்களை மேசை மீது எடுத்து வைத்தார்.

கடைக்கு வந்த நபர் 3 காயில் மின்வயர்களை தூக்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவருடன் தப்பி சென்று விட்டார். இது குறித்து கடைக்காரர் பார்த்திபன் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வயர்களை திருடி சென்ற நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வயர்களை திருடி சென்ற நபர்கள் படப்பை பஜார் பகுதியில் இருப்பதை கண்ட பார்த்திபன் அங்கு இருந்தவர்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து மணிமங்கலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34), கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த ஐவின் (வயது 26) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்