< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் செல்போன் திருடிய 2 பேர் கைது
|23 Oct 2023 12:15 AM IST
தூத்துக்குடியில் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி கே.ஆர்.நகர் தோணுகாலை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் சண்முகபாண்டி (வயது 25). கட்டுமான தொழிலாளி. இவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு கே.டி.சி.நகரில் புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். சம்பவத்தன்று இரவு அந்த பகுதியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு அவருடன் பணியாற்றி வந்த 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து சண்முகபாண்டியின் செல்போனை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, 16 வயது சிறுவன், 18 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.