< Back
மாநில செய்திகள்
வீட்டில் செல்போன்-பணம் திருடிய 2 பேர் கைது
தென்காசி
மாநில செய்திகள்

வீட்டில் செல்போன்-பணம் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
13 July 2023 12:30 AM IST

வீட்டில் செல்போன்-பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே கீழ ஆம்பூர் தங்கம்மன் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 26). இவர் வீட்டு வாசலில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருத்த பாண்டி என்ற கார்த்திக் (24), இடைகாலை சேர்ந்த மருதுராஜ் (22) ஆகியோர் நாகராஜ் வீட்டிற்குள் புகுந்து செல்போன், ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகராஜ் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருத்தபாண்டி, மருதுராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்