< Back
மாநில செய்திகள்
சாமிதோப்பில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சாமிதோப்பில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
23 Jun 2023 3:06 AM IST

சாமிதோப்பில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 11-ந் தேதி மதியம் தனது மோட்டார் சைக்கிளை சாமிதோப்பு பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 26), மாடம்பிள்ளை தர்மத்தை சேர்ந்த மகேந்திரன் (20) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்த போது சிக்கினர். இதில் இருவரும் மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் கண்ணன் மீது தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்