< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
11 Jun 2023 1:32 AM IST

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் சக்திவேல் மகன் மகாபிரபு (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் உறவினர் ஒருவரை பார்க்க வந்தார். அப்போது அவர் நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியை சேர்ந்த மகாராஜன் என்ற ராஜா (20), ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த சுந்தரலிங்கம் (29) ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்