< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
26 May 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி டேவிஸ்புரத்தை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருடைய மகன் மணிகண்டபிரபு (வயது 33). இவர் கடந்த 15-ந் தேதி தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கொங்குசாமி மகன் கார்த்திக் என்ற நேதாஜி (29), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பீர்முகமது மகன் கபீர் (30) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்