< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில்மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில்மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
15 March 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.


கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன் மகன் மாயக்கண்ணன் (வயது 32). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே சிறுவங்கூர் ரோட்டில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார். நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமான வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் மோட்டார் சைக்கிளை ஏமப்பேரை சேர்ந்த பெரியசாமி மகன் தண்டபாணி (40), கலியன் மகன் ஆறுமுகம் (41) ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்