< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
24 Jan 2023 12:15 AM IST

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

வால்பாறை

வால்பாறை அருகே நடுமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சாமி துரை. புதிய பஸ் நிலையம் பகுதியில் இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த ஒர்க் ஷாப்புக்கு பழுது நீக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து வால்பாறை போலீஸ் நிலையத்தில் சாமி துரை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போது காமராஜர் நகரை சேர்ந்த சபரி(வயது 27), ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியை சேர்ந்த ராஜா(38) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்