< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
21 Sept 2022 12:15 AM IST

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மணல்மேடு அருகே உள்ள சேத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அருள் நம்பி (வயது 63). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை பொன்மாசநல்லூர் செல்லும் சாலையில் நிறுத்திவிட்டு வயலுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது ேமாட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து மணல்மேடு போலீசில் அருள்நம்பி புகார் அளித்தார். இந்தநிலையில் மணல்மேடு போலீசார் பொன்மாசநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிள் அருள்நம்பியின் மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. அதன்பேரில் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அதனை திருடிய கடுவன்குடியை சேர்ந்த சுந்தர்ராஜன் (45), கங்கனாம்புத்தூரை சேர்ந்த கோபு (31) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்