திருவண்ணாமலை
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
|ஆரணியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
ஆரணி
ஆரணி அருகே கொங்கராம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் சண்முகம் (வயது 36) என்பவர் கடந்த 8-ந் தேதி காய்கறி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆரணிக்கு வந்தார்.
ஆரணி கோட்டை மைதானம் அருகே அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள காய்கறி கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கி விட்டு வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் இன்று காலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 பேர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு போனதாக கூறப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆரணி புதுக்காமூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (23), ஆரணி பழைய போலீஸ் ஸ்டேஷன் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.