< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த  2 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
3 May 2023 12:24 AM IST

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (வயது 35). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறையில் ஊருக்கு வந்த ஹரிஹரசுதன் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிஹரசுதனின் மோட்டார் சைக்கிளை எரித்தது வாகையடி தெருவைச் சேர்ந்த தாணுமூர்த்தி (21), ராம்கி (21) என்பது தெரிய வந்தது. அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் மதுபோதையில் ஹரிஹரசுதனின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருட முயன்றதும், பெட்ரோல் இல்லாத ஆத்திரத்தில் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்