< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
|23 Jun 2023 12:45 AM IST
போடிமெட்டு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடிமெட்டு பகுதியில் நேற்று குரங்கணி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் ராஜாகாட்டைச் சேர்ந்த ஷாஜி (வயது 47), வெள்ளத்தூவல் பகுதியை சேர்ந்த பென்னிஜோசப் (52) என்றும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜி, பென்னிஜோசப்பை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 47 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 670-யை போலீசார் பறிமுதல் செய்தனர்.