< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
|21 April 2023 12:48 AM IST
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அறந்தாங்கி அருகே குரும்பூரில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை சாலையில் உள்ள குரும்பூர் ஒத்தக்கடை அருகில் பஸ் நிறுத்தத்தில் சின்ன சுனையக்காடு கிராமத்தை சேர்ந்த காளிமுத்து (வயது 48), கருமேணி ஓடை கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (48) ஆகிய 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும், போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.