< Back
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
1 March 2023 12:43 AM IST

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி உத்திரவின்படி, மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தெப்பக்குளத்திற்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரளமாநில லாட்டரி சீட்டுகளை விற்கப்படுவதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டு பழைய பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்ற பெரம்பலூர் அண்ணா நகரை சேர்ந்த தங்கவேலை(வயது 65) கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற அரணாரை அம்பேத்கர் தெருவை சேர்ந்த குணசேகரனை(64) போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்