< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
|4 Oct 2023 11:48 PM IST
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை பஸ் நிலையம் மற்றும் எழுநூற்றுமங்களம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், குளித்தலை போலீசார் அந்த பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அந்தப் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற குளித்தலை புதுக்கோர்ட் தெருவை சேர்ந்த ஷாஜகான் (வயது 45), மணத்தட்டை பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.