தேனி
மதுபானம் விற்ற 2 பேர் கைது
|மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுசுயா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவர் சிலை அருகே 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 15 மது பாட்டில்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், இந்திராபுரி தெருவை சேர்ந்த தங்கபாண்டி (வயது 46), மனோகரன் (55) என்பதும், விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் சிலர் மது அருந்தி கொண்டு இருந்தனர். இதனால் மது குடிக்க அனுமதி கொடுத்ததாக கடை உரிமையாளரான செல்வி (51) என்பவரை போடி தாலுகா போலீசார் கைது செய்தனர்.