< Back
மாநில செய்திகள்
கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் கைது - போலீஸ் விசாரணை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் கைது - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
28 Aug 2022 2:40 PM IST

வண்டலூர் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னல் அருகே உள்ள சாலை சந்திப்பில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு ஓட்டேரி சட்டம் - ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகப்படும் படி ஒரு மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த இம்ராம்யுதீன் (வயது 27), சஜன ஆமாத் (வயது 25) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போதை மாத்திரைகள், ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்