< Back
மாநில செய்திகள்
மதுபானம் வைத்திருந்த 2 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

மதுபானம் வைத்திருந்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
27 March 2023 12:15 AM IST

தேவதானப்பட்டி பகுதியில் மதுபானம் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவதானப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவதானப்பட்டி- ஜெயமங்கலம் பிரிவு அருகே கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் மதுபான பாட்டில்கள் இருந்தது.

விசாரணை நடத்தியதில் அவர், தேவதானப்பட்டியை சேர்ந்த அழகு விஜய் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே மதுபாட்டில் வைத்திருந்த காமக்காப்பட்டியை சேர்ந்த முருகன் (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரிடம் இருந்து மொத்தம் 97 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்