< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
|21 July 2022 12:44 AM IST
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்த சபரிமணி (வயது 21), பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த ராம் பிரசாத் (20) என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.