< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
21 July 2023 1:23 AM IST

பத்தமடையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேரன்மாதேவி:

பத்தமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் பத்தமடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பத்தமடை சிவானந்தா காலனி, வெள்ளநீர் கால்வாய் பாலம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேலச்செவல் கீழரதவீதியை சேர்ந்த மாரியப்பன் என்ற ராம்குமார் (வயது 26), பத்தமடை சிவானந்தா புது காலனியைச் சேர்ந்த பாலமுருகன் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


மேலும் செய்திகள்