< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
20 July 2023 1:11 AM IST

நெல்லையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாவட்ட நீதிமன்றம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த மணி மகன் ஆனந்த் (வயது 25) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அதேபோல் நெல்லை டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள கோவில் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஆத்திராஜன் (71) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்