< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
|10 July 2023 12:15 AM IST
ஆழ்வார்குறிச்சி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே கோவிந்தபேரியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அங்கு பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த முத்துபாண்டி என்பவரது மகன் சுரேஷ் (வயது 33), பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சோமசுந்தர பாண்டியன் மகன் கோபி (30) ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சுரேஷ் வீட்டில் இருந்த சுமார் 1 கிலோ 800 கிராம் கஞ்சாவையும், ரூ.3 லட்சம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.