< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
|25 Oct 2023 12:30 AM IST
நீடாமங்கலத்தில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீடாமங்கலம் மீன் மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்த கீழக்கடம்பூரை சேர்ந்த நவீன்குமார்(வயது20), கொரடாச்சேரி பகுதியைச்சேர்ந்த லோகநாதன்(35) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நவீன்குமார், லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.