திருவண்ணாமலை
வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது
|வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தண்டராம்பட்டு
வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தனூர் வனச்சரகம் மல்லிகாபுரத்தை அடுத்த பெண்ணையாறு காப்பு காட்டில் வனவிலங்குகளை சிலர் வேட்டையாடுவதாக சாத்தனூர் வனச்சரக அலுவலர் நா.சீனிவாசனுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் கோவிந்தராஜ், சிலம்பரசன், ராஜ்குமார், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் காப்பு காட்டை சுற்றி வளைத்து இரவு முழுவதும் கண்காணித்தனர்.
அப்போது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தயார் நிலையில் இருந்த மல்லிகா புரத்தைச் சேர்ந்த கதிர்வேலு (வயது 67), ஊர் கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த சம்பத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 நாட்டு துப்பாக்கி மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை வனத்தறையினர் கைப்பற்றினர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனனர்.
இவர்களுடன் வந்த ஊர் கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த துரைசாமி, குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர் அவர்களை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.