< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
|10 Jan 2023 8:36 PM IST
அரசு மாணவர் விடுதி காப்பாளருக்கு, கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் அமராவதி நகரில் வசிப்பவர் மணிமொழி (வயது 57). இவர், உத்தமபாளையம் அரசு கள்ளர் பள்ளி மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். எரணம்பட்டியை சேர்ந்த மன்மதன் (43), முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்த மலைச்சாமி (47) ஆகியோர் மணிமொழியை கடந்த மாதம் சந்தித்தனர். அப்போது, விடுதி நிர்வாகத்தில் ஊழல் நடந்திருப்பதாக பணம் கேட்டு மிரட்டினர். இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி அப்பகுதியில் மணிமொழி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மன்மதன், மலைச்சாமி ஆகியோர் மணிமொழியை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் மணிமொழி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.