திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
|நாட்டறம்பள்ளியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேத்தாண்டப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் வாணியம்பாடி அருக உள்ள மேட்டுப்பாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த வேலு மகன் ஜடையன் என்கிற கார்த்திக் (வயது 20), உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் ரகுராமன் என்கிற அப்பு (19) என்பதும் கடந்த மாதம் 7-ந் தேதி நாட்டறம்பள்ளி அருகே சமையனூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி உதயமலர் (34) என்பவரிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 9 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.