< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
29 Sept 2023 5:45 AM IST

வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை அருகே உள்ள புத்தூர் குளத்துக்கரையில், வடமதுரை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மயானம் அருகே, 2 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனைக்கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்த ராமையா (வயது 52), சின்னன் (30) என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்