திண்டுக்கல்
தம்பதியை தாக்கிய 2 பேர் கைது
|அய்யலூர் அருகே தம்பதியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அய்யலூர் அருகே உள்ள கெங்கையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தம்பி ராஜா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முருகன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ராஜா மற்றும் அவரது உறவினர்கள் முருகனிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து முருகன் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வடமதுரை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜா மற்றும் அவரது உறவினர்களான சரவணக்குமார், புவனேஸ்வரி, முத்துலட்சுமி உள்பட 5 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து ராஜா, சரவணக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.