< Back
மாநில செய்திகள்
லாரியில் மண் கடத்திய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

லாரியில் மண் கடத்திய 2 பேர் கைது

தினத்தந்தி
|
29 Jun 2022 7:39 PM IST

மத்தூரி அருகே லாரியில் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்

மத்தூர் அருகே உள்ள குண்டேப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் கோவிந்தராஜ் (வயது 35) மற்றும் மணிகண்டன் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்