< Back
மாநில செய்திகள்
டீ மாஸ்டரை தாக்கிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

டீ மாஸ்டரை தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
14 Jun 2022 10:59 PM IST

மத்தூர் அருகே டீ மாஸ்டரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள மாதம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 19). டீ மாஸ்டரான இவர் கண்ணன்டஅள்ளி கிராமத்தில் பேக்கரி கடையில் டீ போட்டு கொண்டிருந்தார். பில்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் (26), ரோசா பிரியன் (25) ஆகிய 2 பேரும் அங்கு வந்து டீ கேட்டுள்ளனர். அப்போது டீ போட்டு கொண்டிருந்த ரஞ்சித்குமார் டீயை மற்றொரு நபருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார், ரோசாபிரியன் ஆகிய 2 பேரும், ரஞ்சித்குமாரிடம் தகராறு செய்து தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார், ரோசா பிரியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்