< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தனியார் பால் நிறுவனத்தில் வயர் திருடிய 2 பேர் கைது
|26 May 2022 8:39 PM IST
மாரண்டஅள்ளி அருகே தனியார் பால் நிறுவனத்தில் வயர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வேப்பலஅள்ளி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது23), சூடமகேந்திரன் (32) ஆகிய 2 பேரும் நிறுவனத்தில் புகுந்து 80 கிலோ எடையுள்ள மின் வயர் மற்றும் காப்பர் வயர்களை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், சூடமகேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.