< Back
மாநில செய்திகள்
2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்
விருதுநகர்
மாநில செய்திகள்

2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்

தினத்தந்தி
|
24 March 2023 12:32 AM IST

நகை பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

சிவகாசி,

சிவகாசி காந்திநகர், காமராஜர் ரோட்டை சேர்ந்த ராமையா மகன் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 12.5.2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி ரெயில் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் பாலகிருஷ்ணன் கழுத்தில் கடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுராஜா, முருகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் நடைபெற்றது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட் ராஜேஷ்கண்ணன் விசாரித்து செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட அழகுராஜா (வயது 19), முருகன் (19) ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். இதனை தொடர்ந்து அழகுராஜா, முருகன் 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்