< Back
மாநில செய்திகள்
2 வியாபாரிகளுக்கு அபராதம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

2 வியாபாரிகளுக்கு அபராதம்

தினத்தந்தி
|
19 July 2023 1:00 AM IST

புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் முருகபவனம், செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கடையில் இருந்து மொத்தம் 13 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைக்காரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்