< Back
மாநில செய்திகள்
2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் திறப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் திறப்பு

தினத்தந்தி
|
1 Aug 2023 12:45 AM IST

மறவமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் திறக்கப்பட்டன.


சிவகங்கை மின் கோட்டம் மறவமங்கலம், வளையம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து சிவகங்கை மின்வாரிய மேற்பார்வைபொறியாளர் குருசாமி உத்தரவின் பேரில் செயற்பொறியாளர் முருகையன், காளையார் கோவில் உதவி செயற்பொறியாளர் அன்புநாதன் ஆகியோர் மேற்பார்வையில் மறவமங்கலத்தில் ரூ.4.35 லட்சம் மதிப்பிலும், வளையம்பட்டியில் ரூ.4.96 லட்சம் மதிப்பிலும் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. மேலும் இந்த இரண்டு டிரான்ஸ்பார்மர்களும் ஒரே நாளில் பொதுமக்களின் உபயோகத்திற்காக திறக்கப்பட்டது

மேலும் செய்திகள்