< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் கைது
|18 July 2024 12:23 PM IST
ஏற்கனவே இந்த படுகொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை,
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 16ம் தேதி அதிகாலை செல்லூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இந்த படுகொலை தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகாலிங்கம், அழகு விஜய் ஆகிய இருவரிடமும் தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.