< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது
|23 Aug 2022 5:11 PM IST
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி, மன்னார் முதலி தெருவில் இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் கடந்த 16-ந்தேதி 7 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்துவிட்டு வேலை இல்லாத பட்டதாரி வாலிபர்களே ஈடுபட்டது தெரிந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே கல்லூரி மாணவர்கள், பட்டதாரி வாலிபர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த விருகம்பாக்கத்தை சேர்ந்த இஸ்மாயில் (வயது 21), பரத்வாஜ் (22) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.