< Back
மாநில செய்திகள்
மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
16 Oct 2023 12:15 AM IST

பொள்ளாச்சியில் மொபட் திருடிய 2 பேர் சிக்கினர்.


பொள்ளாச்சி அடுத்த ஏ.சங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் அழகேஸ்வரி (வயது 30). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மொபட்டை, வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, மொபட் மாயமாகி இருந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அழகேஸ்வரியின் மொபட்டை திருடிய நபர்கள் கேரள மாநிலம் ஆழப்புலாவைச் சேர்ந்த அனுப் (35) மற்றும் வால்பாறை அருகே சோலையார் அணை சத்தியா காலனியைச் சேர்ந்த அவரது நண்பர் வசந்த் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, மொபட்டை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்