< Back
மாநில செய்திகள்
திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்ெகாலை; ஆர்.டி.ஓ. விசாரணை
ஈரோடு
மாநில செய்திகள்

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்ெகாலை; ஆர்.டி.ஓ. விசாரணை

தினத்தந்தி
|
7 Aug 2023 2:48 AM IST

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்ெகாலை; ஆர்.டி.ஓ. விசாரணை

சத்தியமங்கலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்தி (வயது 44). தொழிலாளி.

இதேபோல் கோவை புளியகுளத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகள் கீர்த்தனா (23). கடந்த 9.6.2023 அன்று கார்த்திக்கும், கீர்த்தனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கார்த்தியின் வீட்டில் புதுமண தம்பதிகள் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி ஆடிப்பெருக்கன்று கோவைக்கு கணவனும், மனைவியும் சென்று வந்தனர். சத்தியமங்கலம் வந்ததும், கீர்த்தனா தன்னுடைய தந்தைக்கு போன் செய்து அழைத்து செல்லும்படி கூறியதாக தெரிகிறது. அதற்கு அவருடைய தந்தை வருகிறேன் என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கீர்த்தனா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சத்தியமங்கலம் வந்து கீர்த்தனாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்தனா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தனாவுக்கு திருமணம் ஆகி 2 மாதமே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ.வும், இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்