< Back
மாநில செய்திகள்
2 சாராய வியாபாரிகள் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

2 சாராய வியாபாரிகள் கைது

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

தடுப்புக் காவல் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அருகே உள்ள காரிபாளையம் பாலகிருஷ்ண முதலியார் தெருவை சேர்ந்தவர் கோபால் மகன் லோகநாதன் என்கிற லோகு(வயது 55) மற்றும் லோகநாதன் மகன் ஞானவேல். இவர்கள் மீது சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன,

இவர்களின் தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் லோகு உள்பட இருவரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்