< Back
மாநில செய்திகள்
பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு

தினத்தந்தி
|
12 March 2023 5:23 PM IST

பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

படப்பை அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த பெட்டியை உடைத்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

பஸ் டிரைவர்

காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் வெங்கடேசன் படப்பை பஜாரில் உள்ள இந்தியன் வங்கியில் தனது குடும்ப செலவுக்காக வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.

ரூ.2 லட்சம் திருட்டு

பின்னர் அதே பகுதியில் உள்ள பேட்டரி கடைக்குச் சென்று ஏற்கனவே பேட்டரி சார்ஜ் செய்ய கொடுத்திருந்த பேட்டரியை வாங்க சென்றார். பின்னர் பேட்டரி கடையில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வெங்கடேசன் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரூ.2 லட்சம் திருடப்பட்டது அந்த பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்