புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயன்
|புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
சென்னை
2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு
* ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும்; இது மாநிலத்தின் 18வது சரணாலயாமாக இருக்கும்.
* கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடி மதிப்பீட்டில் 'தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்' உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
* புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரிப்பு.புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்
* பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ₹10,500 கோடி ஒதுக்கீடு
* மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ₹320 கோடி ஒதுக்கீடு