சென்னை
தண்டையார்பேட்டையில் இருவேறு சாலை விபத்தில் 2 பேர் பலி
|தண்டையார்பேட்டையில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
சென்னை கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 55). காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. அருகே எண்ணூர் பிரதான சாலையில் சென்றபோது பின்னால் வந்த டேங் கர் லாரி இவர் மீது மோதி யது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பத், டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழில் (35) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன் (50). மாற்றுத்திறனாளியான இவர், தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. அருகே உள்ள இரும்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர், வேலை முடிந்து நேற்று முன்தினம் இரவு மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் உள்ள பள்ளத்தில் மூன்று சக்கர சைக்கிள் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் முகுந்தன் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான சென்னை அன்னை சத்யா நகரை சேர்ந்த கணேசன் (42) என்பவரை கைது செய்தனர்.