< Back
மாநில செய்திகள்
தாம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதியதில் 2 பேர் பலி; ரெயில்வே போலீசார் விசாரணை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தாம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதியதில் 2 பேர் பலி; ரெயில்வே போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
12 Sept 2022 3:16 PM IST

தாம்பரம் அருகே இரு வெவ்வேறு இடங்களில் நடந்த ரெயில் விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

தண்டவாளத்தை கடந்தார்

தாம்பரம் அடுத்து பெருங்களத்துார், எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் பந்தோஷ் தேவராஜ் (வயது 26). இவர் மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலைக்கடன் கழிப்பதற்காக பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்த போது, சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேபோல, சென்னை, நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (60). இவர் நேற்று காலை அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வண்டலூர் பகுதிக்குச் சென்று அங்கிருந்து வண்டலூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

சரக்கு ரெயில்

அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்