< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி

தினத்தந்தி
|
24 Sept 2023 5:36 PM IST

பனையூர் அருகே மோட்டார் சைக்கிள் மாடு மற்றும் லாரி மீது மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

மோட்டார் சைக்கிள் மோதியது

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). திருவள்ளுர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26). திருவண்ணாமலை மாவட்டம் நாடழகானந்தல் பகுதியை சேர்ந்தவர் விஸ்வா (21). இவர்கள் 3 பேரும் எழிச்சூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் எழிச்சூர் பகுதியில் இருந்து கண்டிகை நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர்.

பனையூர் அருகே சாலையின் குறுக்கே திடீரென மாடுகள் வந்ததால் மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கண்டிகையில் இருந்து எழிச்சூர் நோக்கி வந்த லாரியின் பின்னால் மோதியது.

சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்திக், மணிகண்டன் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விஸ்வா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த விஸ்வாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்