< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு - 3 பேரை தேடும் பணி தீவிரம்
|8 Sept 2024 2:00 PM IST
திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர்,
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 18 பேர் கடந்த 5-ந்தேதி வேளாங்கண்ணி திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, இன்று காலை 7 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவிலுக்கு வந்தனர். இந்த நிலையில் அவர்களில் 12 பேர் கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் கிஷோர் (20 வயது), கலையரசன் (20 வயது) ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாயமான பிராங்கிளின் (23 வயது), ஆண்டோ (20 வயது), மனோகரன் (19 வயது) ஆகியோரை தேடும் பணியில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.