< Back
மாநில செய்திகள்
வாயலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சாவு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வாயலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சாவு

தினத்தந்தி
|
11 Oct 2023 2:06 PM IST

வாயலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம கூவத்துார் அடுத்த அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் பாஸ்கர் (வயது 19). இவர், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து புதுப்பட்டினத்திற்கு தனது அத்தை மகள் சுகந்தி (வயது 19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கடலூர் சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்த கவுதம் (26) என்பவர் தனது மனைவி அஸ்வினியு டன் (20) புதுப்பட்டினத்தில் இருந்து கடலுாருக்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வாயலுார் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பாஸ்கர் பரிதாபமாக இறந்தார். கவுதம் மற்றும் 2 பெண்களும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கவுதம் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்னர். சுகந்தி, அஸ்வினி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்