விருதுநகர்
அரசு பஸ் மோதி 2 பேர் பலி
|அருப்புக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..
விவசாயி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிதம்பரம் தெருவை சேர்ந்தவர் கடற்கரை செல்வம் (வயது 70).
விவசாயியான இவர், தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி எதிரே உள்ள வயற்காட்டில் சோளம் விதைத்துள்ளார்.
களை எடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டியை சேர்ந்த பிச்சை (70) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்று விட்டு மீண்டும் அருப்புக்கோட்டைக்கு திரும்ப வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கடற்கரை செல்வம் ஓட்டினார்.
2 பேர் பலி
அப்பகுதியில் உள்ள சாலையில் திரும்ப முயன்றபோது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த மந்திரம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.