< Back
மாநில செய்திகள்
கார் மோதி 2 பேர் பலி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கார் மோதி 2 பேர் பலி

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

கார் மோதி 2 பேர் பலியாகினர்.

ராமேசுவரம்,

தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் எட்மன்ட் (வயது 50). தங்கச்சி மடத்தில் இருந்து தர்கா பஸ் நிறுத்தம் அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது திருவாரூரில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த சுற்றுலா கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த எட்மன்ட் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தங்கச்சிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருவாரூரை சேர்ந்த செய்யது அப்துல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாடானை தாலுகா உசிலனகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைச்சாமி(71). டீக்கடை நடத்தி வந்தார். நேற்று மோட்டார் சைக்கிளில் தொண்டி அடுத்த சோளியக்குடி தர்கா அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியதில் கோட்டைச்சாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தொண்டி போலீசார் காரை ஓட்டி சென்ற தர்மபுரி செங்கோடுபுரம் கோபி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்